Tuesday, November 17, 2009

எப்படி விடுபட்டேன்.... நான் மட்டும்!
ஒரு சொல் , ஒரு ஜாடை,
ஒரு முககுறி காட்டிஇருந்தால்
அந்த இரவில்
நிழலாய் தஙகிஇருப்பேன் உன்னோடு .
தொப்புள் கொடி சுவாசம்
தந்த தாயே நீ மாரடைத்து இறந்த அந்த சுவாச
கணத்தில் என் முகம் ஒடிற்ற அம்மா.....

தகர மயானம் முன் குவிந்த விரட்டி படுக்கயுள் நீ.
இறட்டைவடம் மார்பு சங்கலிமேல்
மூத்தவனுக்கு குறி.
அன்னம் பொங்கி அடுப்பில் வெந்த
உன் வலது கரத்தில்
குறடு நுழைத்து வெட்டிய வளையலோ
அடுத்தவனுக்கு.
மகளே உனக்கு என்னமா வேண்டுமென்ற அப்பாவிடம்
கொடிகம்பயுல் காயும் உன்
நைந்த உள் பாவடை காட்டி
அழுகிறேன் பெரும் குரலில்.......

- பா sathyamogan

3 comments:

  1. hi karthika,
    Excellent post,Aazhagana kavithai :) keep Posting
    I think GOOD that by reading and listening to good stuff again & again ,THAT ONE IS getting from ur blog

    ReplyDelete
  2. hi karthika
    really very nice ........update every week ...

    ReplyDelete