Showing posts with label முத்திரை கவிதைகள். Show all posts
Showing posts with label முத்திரை கவிதைகள். Show all posts

Saturday, June 25, 2011

Relationship....

" The husband-wife relationship is divine;
no other can equal it in its depth and intensity,
because, only in this relationship..
the union of souls occur "
- Vethathiri Maghrishi

Monday, June 20, 2011

Dad......

When I was a baby,
you would hold me in your arms.
I felt the love and tenderness,
keeping me safe from harm.....

I would look up into your eyes,
and all the love I would see.
How did I get so lucky,
you were the dad chosen for me....

There is something special
about a father's love.
Seems it was sent to me
from someplace up above....

Our love is everlasting,
I just wanted you to know.
That you’re my special hero
and I wanted to tell you so.....


Wednesday, March 17, 2010

அப்பா......


சிறுவயது முதல்
என் சினிமா ஹீரோ
நீதான்

எதையும் செய்தாய்
எனக்காக‌
என் சிரிப்பை
காணும் நொடிக்க்காக‌

உன்னோடு நான்
உலகையே
சுற்றினாலும்
அடுத்த் ரவுண்டும்
அலுக்காமல்
கூட்டிச்செல்வாய்

சக்கரை இனிமையாக‌
நீ விளக்கும் கற்பனை
உலகை இனிமையாக்கி
எனக்கு தரும்

என் முதுகெலும்பு
நிமிர்ந்த்ததும்
மிதிவண்டி நக்ர்ந்ததும்
உன்னால் தானே.

ஆலமரத்துக்கு ஆயிரம்
விழிதிருக்கலாம்..
நான் விழாமல் தாங்கிய
வேர் நீ தானே.

என் கடமையை செய்ய
உன் கடைசி நிமிடத்தில்
கூட வாய்ப்பு தர
வில்லை நீ .

தேர்வுகள் எத்தனை
கடந்து வந்தாலும்
தந்தை சொல் தானே
மந்திரம் எனக்கு.

Monday, November 23, 2009

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
அமர்ந்து இருப்பேன் நான்.
அடக்கமாக எனக்கு பின்னால்
நின்று கொண்டு இருப்பாய் நீ .

உன் இனத்து கற்புக்கு அரசிகளை சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்.
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாய் இருப்பாய் நீ.

நீ எனக்கு இருப்பதை பிறர் கேட்டால் ஒழிய
சொல்லிகொள்வதில்லை நான்.
நான் உனக்கு இருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறை சற்றியாக வேண்டும் நீ.

எனக்கு பிறகு என் நினைவுகளோடு
வாழ வைகிறார்கள் உன்னை.
உனக்கு பிறகு உன் தங்கையோடு
வாழ வைகிறார்கள் என்னை.

நானும் நீயும் - Jayabashkaran.

Tuesday, November 17, 2009

எப்படி விடுபட்டேன்.... நான் மட்டும்!
ஒரு சொல் , ஒரு ஜாடை,
ஒரு முககுறி காட்டிஇருந்தால்
அந்த இரவில்
நிழலாய் தஙகிஇருப்பேன் உன்னோடு .
தொப்புள் கொடி சுவாசம்
தந்த தாயே நீ மாரடைத்து இறந்த அந்த சுவாச
கணத்தில் என் முகம் ஒடிற்ற அம்மா.....

தகர மயானம் முன் குவிந்த விரட்டி படுக்கயுள் நீ.
இறட்டைவடம் மார்பு சங்கலிமேல்
மூத்தவனுக்கு குறி.
அன்னம் பொங்கி அடுப்பில் வெந்த
உன் வலது கரத்தில்
குறடு நுழைத்து வெட்டிய வளையலோ
அடுத்தவனுக்கு.
மகளே உனக்கு என்னமா வேண்டுமென்ற அப்பாவிடம்
கொடிகம்பயுல் காயும் உன்
நைந்த உள் பாவடை காட்டி
அழுகிறேன் பெரும் குரலில்.......

- பா sathyamogan

அன்பு என்ற தலைப்பில்

மிக சிறிய கவிதை கேட்டார்கள்......

அம்மா

என்றேன் உடனே......

கேட்டது அம்மாவாக இருந்தால்

இன்னும் சின்னதாய் சொல்வேன்

நீ என்று........


- தாஜ்